Wednesday, October 30, 2013

உங்கள் காதலி இவற்றில் சொன்னது எது???

1.உனக்கு என்னவிட நல்ல பொண்ணு கிடைப்பா Bye.

2.Message பண்ணேன் ரிப்ளை இல்ல , கால் பண்ணேன் கண்டுக்கல …வேணாம் நமக்குள்ள ஒத்துவராது.

3.அய்யய்யோ என் புருசன் பட்டாளத்துல இருந்து வந்துட்டாரு.


4.எனக்கு மட்டும் அம்மா அப்பா இல்லையா? நான் அவங்கள விட தயாரா இல்லையா?

5.யாரந்த பொண்ணு,உன் Status எல்லாத்தையும் like பண்ணுறா

6.என்னைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு வீட்ல சொல்ல தைரியம் இல்லாத உன்னை நம்பறது வேஸ்ட்

7.பாய்-ரொம்ப நேரம நான் டரை பண்ணுறன் உன் கால் வைடிங்லே இருக்குது, கேர்ல்-என் மேல சந்தேகபடுறல்ல வேணாம் கட் பண்ணிக்கலாம்

8.உங்க அப்பாவுக்கே உன்ன புடிக்கல எங்க அப்பாவுக்கு எப்டி புடிக்கும்

9.ஆ.. அது வந்து! ரொம்ப சாரி அண்ணா!!

10.உன்ன அண்ணனா நெனச்சு பழகுனா இப்படி பண்ணிட்டியே!

11.கண்டிப்பா எனக்கு பொறக்கபோர குழந்தைக்கு உன் பெயரை வைப்பேன்!

12.இந்த செமஸ்டர்ல எல்லா பேபரும் கிளிக் பண்ணாதான் உன்ன லவ் பண்ணுவேன்…

‘ஆரம்பம்’ டைட்டில் என்னுடையது : வெறும் 2800 ரூபாயில் சொந்தம் கொண்டாடும் ஆசாமி?

பெரிய பெரிய ஹீரோக்களை வைத்து பல கோடி ரூபாய் முதலீட்டில் படம் எடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். படம் நன்றாக வர வேண்டும் என்று பல நூறு டெக்னீஷியன்களும் இரவு பகல் பாராமல் அந்தப்படத்தில் உழைக்கிறார்கள்.

ஆனால் இந்த உழைப்பின் பின்னணியே தெரியாமல் சில புதுமுக டைரக்டர்கள் அந்தப்படம் ரிலீசாகும் நேரத்தில் ப்ளாக்மெயில் செய்து அவர்களிடம் ஏதாவது பணத்தை கறப்பதற்காகவே கிளம்பி விடுகிறார்கள்.

அப்படித்தான் அஜித்தின் ‘ஆரம்பம்’ பட டைட்டில் என்னுடையது என்று புதிதாக ஒரு டைரக்டர் கிளம்பியிருக்கிறார்.

‘ஆரம்பம்’ படம் ஆரம்பித்த போது எந்த எதிர்ப்பையும் காட்டாத அந்த ஆசாமி இப்போது நாளை படம் ரிலீசாக உள்ள நிலையில் அந்த டைட்டில் என்னுடைய டைட்டில் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

கே.கண்ணன் என்பவர் சென்னை 14வது சிட்டி சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :

‘‘இனிதான் ஆரம்பம்’’ என்ற பெயரில் நான் ஒரு படம் தயாரித்து டைரக்ட் செய்து வருகிறேன். இந்த தலைப்பை கில்டில் பதிவு செய்திருக்கிறேன். இந்த நிலையில் ஸ்ரீ சத்யசாய் மூவீஸ் என்ற நிறுவனம் ‘ஆரம்பம்’ என்ற பெயரில் அஜித் நடிப்பில் ஒரு படத்தையும் தயாரித்துள்ளார்கள்.

‘ஆரம்பம்’ பெயரில் படம் ரிலீசானால் ‘இனிதான் ஆரம்பம்’ என்ற பெயரில் நான் எடுத்து வரும் படத்துக்கு பாதிப்பு ஏற்படும். மக்களுக்கும் குழப்பம் வரும். அதனால் ‘ஆரம்பம்’ என்ற டைட்டிலுக்கு தடைவிதிக்க வேண்டும்” என்று அந்த அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று வருகிறது.

முன்பு இதேபோல விஜய்யின் ‘துப்பாக்கி’ படத்தை ஆரம்பித்தபோது அமைதியான இருந்த ‘கள்ளத்துப்பாக்கி’ படக்குழுவினர் அந்தப்படம் ரிலீசாவது தெரிந்தவுடன் டைட்டிலை மாற்றச்சொல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தோற்றுப் போனார்கள்.

இப்போது அதேமாதிரி ஒரு நிலைமை தான் இந்த ஆசாமிக்கும் ஏற்படும் என்று தெரிகிறது.

ஆனால் இதில் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் புதிய படங்களின் டைட்டிலை கில்டு மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்வது வழக்கமான ஒன்று தான். இதில் கில்டில் பதிவும் செய்ய வெறும் 2800 ரூபாய் தான், ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய 1 லட்சம் ரூபாய் பணம் கட்ட வேண்டும்.

அதனால் சில லட்சங்களை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு படம் எடுக்கிறேன் என்று வரும் சில புதிய தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் 2800 ரூபாயை மட்டும் கில்டில் கட்டிவிட்டு இதுபோன்ற பெரிய படங்களின் டைட்டிலுக்கு சொந்தம் கொண்டாடுவது வாடிக்கையாக உள்ளது.

ஆனால் கில்டை விட தயாரிப்பாளர் சங்கம் தான் இந்த விஷயத்தில் அதிக அதிகாரங்களை கொண்டது. தொடர்ச்சியாக நடைபெறும் இதுபோன்ற பிளாக் மெயில் சமாச்சாரங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சினிமா விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

நடவடிக்கை எடுக்குமா தயாரிப்பாளர் சங்கம்?

கோடம்பாக்க அலையில் ஸ்ரீதிவ்யா

படங்களின் வாய்ப்புகள் குவிந்துள்ளதால் குஷியில் இருக்கிறாராம் ஸ்ரீதிவ்யா.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஊதா கலர் ரிப்பன் புகழ் ஸ்ரீதிவ்யா கைவசம் நிறைய படங்கள் உள்ளன.

அதில் முதலாவதாக இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் பென்சில் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பில் வருகிற நவம்பர் 20ம் திகதி முதல் கலந்துகொள்ள இருக்கிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் அடுத்து இயக்கவிருக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகவும் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படங்கள் தவிர இன்னும் இரண்டு படங்களில் கமிட் ஆக உள்ளார் ஸ்ரீதிவ்யா.

இதுகுறித்து அவர் கூறுகையில்,வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பிறகு நிறைய படங்களில் நடிக்க அழைப்பு வருகிறது.

ஆனால் எனது சொந்த ஊரான ஹைதராபாத்தில் படித்து வருவதால் நடிப்புடன் படிப்பையும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது என்றும் அதனால் நிறைய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளளார்.

இருந்தாலும் நல்ல கதை, நல்ல இயக்குனர் மற்றும் பெரிய ஹீரோ என்றால் என் கால்ஷீட் நிச்சயம் உண்டு என்கிறார்.

ப்ளீஸ் ‘தொப்புள் சீன்’ வைய்ங்க! : டைரக்டர்களை திணறடிக்கும் நஸ்ரியா

நஸ்ரியா என்றாலே அவரின் ‘தொப்புள்’ களேபரம் தான் ஞாபகத்துக்கு வரும். அந்தளவுக்கு இத்துணூண்டு தொப்புள் மேட்டரை ஏதோ அமெரிக்காவோட பொருளாதார நெருக்கடி ரேஞ்சுக்கு பில்டப் பண்ணி விட்டார்.

அவரின் அந்த செயலுக்கு எல்லோரும் சப்போர்ட் செய்வார்கள் என்று எதிர்பார்த்தார் நஸ்ரியா. கடைசியில் மூக்குடை பட்டது தான் மிச்சம்.

அதுமட்டுமில்லாமல் அவர் ஏற்கனவே கமிட் செய்து வைத்திருந்த பட வாய்ப்புகள் கூட அவரை விட்டு நழுவிப் போக ஆரம்பித்தன. அதிலும் விஜய்யுடன் நடிக்க வந்த வாய்ப்பு கை நழுவிப் போனதில் ரொம்பவே நொந்து விட்டார் நஸ்ரியா.

அதனால் அரண்டு போன நஸ்ரியா இனி மிச்சம் மீதி இருக்கின்ற படங்களையாவது கெட்டியாப் பிடிச்சிக்கணும் என்று திட்டமிட்டு அந்தப்படங்களில் டைரக்டர்களுக்கு போனைப் போட்டு இரவு, பகலாக மனதுக்கு நெருக்கமாக பேசி வருகிறாராம்.

அத்தோடு சார், உங்க படத்துல தொப்புள் சீன்ஸ் கூட வையுங்க, நான் நடிக்க தயாரா இருக்கேன் என்றும் திணறடிக்கிறாராம்.

அது உண்மைதான் என்பது போல நஸ்ரியாவை வைத்து புதிய படத்தை டைரக்ட் செய்து வரும் பாலாஜி மோகன் “அந்த பொண்ணு எந்த தொந்தரவும் குடுக்கல சார் என்று சர்டிஃபிகேட் கொடுக்கிறார்.

நஸ்ரியாவுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்ல ஃபுல் சப்போர்ட் பண்றார். ரெண்டு நாட்கள் நஸ்ரியாவை வெச்சி போட்டோ ஷுட் நடத்தினோம். தொழில் ரீதியான ஈடுபாட்டை அவர்கிட்ட என்னால பார்க்க முடிந்தது. ட்ரெஸ் விஷயத்துல அவர் எந்த பிரச்சனையும் பண்ணல என்று கூறுகிறார் பாலாஜி மோகன்.

அதுசரி இனிமே நீங்க சொல்றத தானே நஸ்ரியா கேட்டாகணும்.

Tuesday, October 29, 2013

தொழில்நுட்ப வளர்ச்சியை பார்த்தீர்களா ... - வீடியோ இணைப்பு

அமெரிக்காவில் 500kV மின்சார கம்பத்தை Skycrane உதவியுடன் நிறுவி புதிய தொழில்நுட்ப சாதனை ... Skycrane Construction on BPA's New 500kV Transmission Line



விஜயசாந்தி போல் ஆக்சன் போட வேண்டும் - நமீதாவுக்கு ஆசை

விஜயசாந்தி போல் ஆக்சன் படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக நமீதா கூறினார்.

இவரிடம் மூன்று படங்கள் கைவசம் உள்ளன. அரிராஜன் இயக்கும் ´இளமை ஊஞ்சல்´ படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகிறது.

நமீதாவுக்கு சமீபத்தில் உடல் எடை கூடி இருந்தது. கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்து ஆக்சன் நடிகைக்கான தோற்றத்தில் உருமாறி இருக்கிறார்.

இதுபற்றி நமீதா சொல்கிறார்; ‘‘எனக்கு ஆக்சன் படங்களில் நடிக்க பிடிக்கிறது. ஒரே மாதிரி கவர்ச்சியாக நடிப்பதில் விருப்பம் இல்லை. ‘இளமை ஊஞ்சல்’ படம் என் எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி அமைந்துள்ளது.

இதில் பொலிஸ் அதிகாரி வேடம் என்பதால் ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளேன். சண்டை காட்சிகளில் நான் நடித்ததை பார்த்து ஸ்டண்ட் மாஸ்டர் பாராட்டினார்.

ஆக்சனில் விஜயசாந்தி என்ரோல் மாடல். அடுத்த விஜயசாந்தி என்ற பெயர் எடுக்க விரும்புகிறேன். ‘இளமை ஊஞ்சல்’ தவிர இன்னொரு ஆக்சன் படத்திலும் நடிக்கிறேன்.

இவ்வாறு நமீதா கூறினார்.

காதலின் ஆயுட்காலம் எவ்வளவு? : கண்டறியும் ஆய்வு

புதிதாக காதல் வசப்பட்ட ஜோடிகளிடையேயான காதலும் நேசமும் எவ்வளவு காலத்துக்கு நிலைத்திருக்கும் என்பதை அவர்களது மூளைகளை ஊடுகாட்டும் பரிசோதனைக்குட்படுத்தி கண்டறியமுடியும் என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மூளையின் செயற்பாடுகளை ஊடுகாட்டும் பரிசோதனை மூலம் கண்டறிந்து புதிதாக காதல் வசப்பட்டவர்களிடையேயான அன்புப் பிணைப்பு மூன்று வருடங்களுக்கு பின் எவ்வாறு இருக்கும் என்பதை எதிர்வுகூறமுடியும் என லோங் தீவிலுள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகம் மற்றும் ரொட் தீவிலுள்ள பிறவுண் பல்கலைக்கழகம் என்பவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் இந்த ஆய்வை தொண்டு அடிப்படையில் தாமாக முன்வந்து பங்கேற்ற 12 பேரிடம் மேற்கொண்டனர்.

மேற்படி 12 பேரிடமும் அவர்களது மறக்க முடியாத ஞாபகங்களை சிந்திக்குமாறு கோரப்பட்டு, அதன்போது அவர்களது மூளையில் ஏற்பட்ட ஊடுகாட்டும் கருவிகள் மூலம் படமாக்கப்பட்டன.

இதன்போது நிஜமாக ஒருவர் மீது ஒருவர் தீவிர காதல் கொண்ட ஜோடிகளின் தோற்ற அழகிற்கு உணர்வுபூர்வமாகப் பிரதிபலிக்கும் மூளையின் பகுதி செயற்திறன்மிக்கதாகவும், குற்றஞ்சாட்டுதல் மற்றும் நியாயஸ்தம் செய்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய மூளையின் பகுதி செயற்திறன் குறைந்ததாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Making Of என்றென்றும் புன்னகை திரைப்படப் பாடல்



தாய்மையை நேசிக்கும் ஒப்வொரு பிள்ளைகளும் இதை படிக்கவும் இது கதை அல்ல நியம்

குரங்கிலிருந்து பெறப்பட்ட உலகில் சிறந்த பரிணாமம் தான் மனிதன், மனிதனாகிய நாம் வாழ்வில் பல பருவ-பரிணாமங்களை அடைகிறோம், அதில் வாழ்க்கை அனுபவமும்,முதுமையும் முழுமைப்பெற்ற பருவம் தான் “முதிர்ப்பருவம்”.

நீண்ட வருடங்களுக்கு பிறகு என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன் என் வருகையை எதிர்பாராத அவர் வீட்டின் வாசல் கதவு பூட்டிருந்தது, நண்பரின் அலைபேசிக்கு தொடர்புக்கொண்டு கேட்ட போது தாம் வெளியில் இருப்பதாகவும் நீங்கள் பக்கத்து வீட்டில் அமருங்கள் இதோ வந்துவிடுகிறேன் என்றார் மகிழ்ச்சியுடன்.

பக்கத்து வீட்டு திண்ணை சுவரின் மூலையில் சாய்ந்தவாறு ஒரு வயதான அம்மா இருந்தார். அந்த வீட்டுகாரரிடம் அனுமதி பெற்று திண்ணையில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.அவர் பார்ப்பதற்கு உடல் ஆரோக்கியம் குன்றிய தோற்றத்தில் இருந்தார். அவர் அருகில் உறங்குவதற்கு பழைய துணிகளை அடைத்து தயார் செய்த ஒரு தலையணையும், நூல்கள் பிரிந்த கோரைப்பாய் ஒன்றும் மட்டுமே இருப்பதை காணமுடிந்தது.

அவரை பார்த்தவுடன் என்னை அறியாமலேயே எப்படி இருக்கிறீர்கள், உங்களுக்கு என்ன செய்கிறது என்று வினவினேன். அவரோ சற்று மங்கிய கண்ணொளியில் சுருங்கிய கண் இமைகளின் மூலம் பார்த்தார், என்னை பார்த்தவுடன் அவரது முதிர்ந்த கண்ணோரங்களில் கண்ணீர் பொழிந்தது, நான் பயந்து விட்டேன் “ஏனம்மா என்ன ஆயிற்று நான் ஏதாவது தவறாக கேட்டேனா?” என்றேன். அதற்கு அவர் “நீங்கள் யார் என்றே தெரியாது இருப்பினும் உங்கள் கனிவான வார்த்தை என்னை உணர்ச்சிவசத்தை ஏற்படுத்திவிட்டது” என்றார்.

மேலும் “நான் உயிருடன் இருக்கிறேனா இல்லையா என்று என் மகன்களே என்னை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள். நீங்கள் என்னை கேட்ட அந்த கனிவான வார்த்தையை என் மகன்கள் கேட்டிருந்தால் இப்போது நீங்கள் என்னை கேட்டிருக்க வாய்பிருக்காது” என்றார். (அவருடைய சொற்களில் அன்பின் ஏக்கமும்,பிள்ளைகளின் உறவில் பாசமின்றி தவிக்கும் பரிதாபமும் புரிந்தது).

மேலும் அவர் இந்த நிலைமைக்கு வந்த நிகழ்வுகளை சொல்ல ஆரம்பித்தார் :

அவர் கணவர் உடல்நல குறைவால் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாகவும், கணவரின் மாத ஓய்வூதியத்தையும், சிறு இட்லிக்கடை வியாபாரத்தையும் மட்டுமே நம்பி தற்போது உயிர் வாழ்வதாகவும், மகன்கள் இருவருக்கும் திருமணம் ஆன பின்பு வெளியூரில் குடும்பத்துடன் வசிப்பதாகவும், மகன்கள் வீட்டில் மாதம் மாதம் மாறி வாழ்வதை பிடிக்காததாலும் , நகர வாழ்க்கை பழக பிடிக்காததாலும், இப்போது சொந்த ஊரில் வீட்டிலேயே இட்லிக்கடை ஒன்றை நடத்தி வருவதாகவும், தற்போது உடல் நலக் குறைவால் வாழ்க்கை நிறைவு பெறும் தினத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன் எனவும் கூறினார் சோகத்துடன்.

மேலும் வெளியூரில் வாழும் இரு மருமகள்களும் என்னுடன் சேர்ந்து வாழ பிடிக்காத காரணத்தால் தன்னுடைய மகன்கள் மட்டும் எப்போதாவது பேரப்பிள்ளைகளுடன் வீட்டிற்கு வந்துபோவதாக ஏக்கத்துடன் கூறினார்.

(துணைவரை இழந்து இரத்த சோகையாலும்,ஆஸ்துமாவலும் பாதிப்படைந்த இந்த வயதான காலத்திலும் இட்லிக்கடை வைத்து பிழைத்துக்கொண்டு அவதிப்படும் அந்த அம்மாளுக்கு இரண்டு மகன்கள், மருமகள்கள் என உறவுகள் இருந்தும் அவரை பராமரிக்க ஒருவரும் இல்லை என்பதை அவருடைய சோக குமுறலின் மூலம் அறிந்தவுடன், எனக்கு இதுபோன்ற ஒரு பாட்டி இல்லையே என்ற ஏக்கமும் மனத்திலுள்ள ஏக்கமும் சேர்ந்து என் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது).

என் நண்பரும் வந்துவிட்டார், நான் பிரிய மனமின்றி பத்மா அம்மாவிடம் கவலைப்படாதிர்கள் நான் உங்கள் பேரப்பிள்ளையாக என்றும் இருப்பேன். இனி நல்லதே நடக்கும் என்று நம்புவோம் என்று என்னால் முடிந்த அன்பான வார்த்தைகளை சொல்லிவிட்டு விடைப்பெற்றேன்!

நாகரிகமான வாழ்க்கையிலும் ஏன் இந்நிலை முதியவர்கள் மனத்தில் காயங்கள் உண்டாக்கும் கரும்புள்ளிகளாக எது உள்ளது?

ஒவ்வொருவருக்கும் தன்னுடைய “தாய்” தான் முதல் தெய்வம்.

“கருவறையில் சுமந்து, மறுப்பிறவி எடுத்து,

நம்மை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்யும்

தேவதை தெய்வமேயன்றி வேரெவர்??”

“நமக்கும் ஒருநாள் முதுமை வரும் பூமியதன் வாழ்நாளை பார்க்கும் போது நம் வாழ்க்கை சில வினாடிகளே” என்ற எண்ணம் ஏன் பொறுப்பில்லாத மகன்களுக்கு வராமல் போகிறதோ!!.

மேலைநாடுகளில் ஒரு குடும்பத்தில் 18 வயது தாண்டியவுடன் யார் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். ஆனால் நம் பண்பாட்டில் ஆண் மக்களே தங்கள் குடும்ப உறவுகளான தாய்-தந்தை முதல், மனைவி, குழந்தைகள், தாத்தா-பாட்டி வரை பாதுகாத்து குடும்ப உறவை சிறப்பிப்பது தார்மீக கடமையாக உள்ளது. இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் இக்கடமைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தேவிட்டது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில், கூட்டுக் குடும்பங்கள் சிதறி, நகரத்தை நோக்கி, “குடும்பம்” என்ற நிலை “கணவன் – மனைவி” என்ற குறுகிய வட்டத்தில் அடங்கிவிட்டது. மேலும் அவர்களது குடும்ப உறவுகளில் குழந்தைகள் மட்டுமே சேருகின்றன.அந்த “கணவன் – மனைவி” குடும்பத்தில் அவர்களது பெற்றோர்கள் சேர்க்கப்படாமல் பெரும்பாலும் ஒதுக்கப்படுகிறார்கள்.

இதற்கு காரணம்.. கணவன், அவன் மனைவி சொல்வதை மட்டுமே கேட்கவேண்டும், மனைவியையும் குழந்தைகளையும் மட்டும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற என்னமும் தான் முதலில் உள்ளது. (சுருக்கமாக நமது நடையில் சொல்லவேண்டும் என்றால் “மாமியார்-மருமகள் பிரச்சினை” வந்து விடுகிறது). இதில் வேறு சில தனிப்பட்ட பிரச்சனைகளும் அடங்கும்.

இதிலும் சில பிள்ளைகள் தனக்கென மனைவி,மக்கள் வந்தவுடன் தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து பெரும் கடமையை நிறைவேற்றியதாக எண்ணுவது மடமை.

இவர்களுக்கும் முதுமை வரும் அப்போது தன் பிள்ளைகளும் தம்மை அதுபோன்ற முதியோர் இல்லத்திற்கு அனுப்பமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? மேலும் குடும்ப உறவில் கசப்படைந்து “முதியோர் இல்லம்” நோக்கி செல்லும் நம் பெற்றோர்களையும் அங்கு போகவிடாமல் அன்பு,பாசம் அளித்து அவர்கள் மனம் கோணாமல் நடப்பதில் முயற்சி செய்யவேண்டும்.

“வாழ்க்கை என்பது ஒரு வட்டம்” என்பதற்கு பொருளாய் குழந்தையாகப் பிறந்து,வளர்ந்த மனிதன் தன் பெற்றோரின் நிலையைத்தான் முதுமையிலும் அடைகிறான். (கருவில் வளைந்து,வெளியில் நிமிர்ந்து, நடந்து வாழ்பவன் முதுமையை அடைந்தவுடன் மீண்டும் முதிர்ந்து,வளைந்து அதே ஆரம்ப நிலையை தான் அடைகிறான்).

முதியவர்களின் வாழ்க்கை-அனுபவங்கள், வாழ்வியலில் Phd படிப்பு படித்தோர்க்கும் பாதியளவுக்கூட கிடைப்பதில்லை என்பது அனுபவ மனிதர்களின் ஒப்புதல்.

பெற்றோர்களின் உயர்வைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “பிள்ளைகளாய் இருப்போரே, தாயின் காலடியில்தான் உங்களுக்கான சொர்க்கம் உள்ளது” எனக் கூறுகிறார்கள். பெற்றோர்களால் கைவிடப்படும் குழந்தைகளும், பிள்ளைகளால் ஒதுக்கப்படும் பெற்றோர்களும் அனாதைகளே!! எனவே வாசம் வீசும் முதிர்பூக்களான நம் பெற்றோர்களை என்றும் வாடாமல், மதித்து “குடும்பம்” என்னும் தோட்டத்தில் வாழ்நாள் முழுவதும் வைத்துக்கொள்ள வேண்டும்.

நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட்! நீதிபதி அதிரடி உத்தரவு

இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில், நடிகை அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

நடிகை அஞ்சலி கடந்த ஏப்ரல் மாதம் திடீரென்று தனது சித்தி பாரதிதேவியும், இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துக்களை அபகரிக்க முயல்வதாக புகார் கூறியதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின் சில நாட்கள் தலைமறைவாக இருந்த நடிகை அஞ்சலி, திடீரென ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்குமூலமும் அளித்தார்.

நடிகை அஞ்சலியை தான் கொடுமை படுத்தவில்லை என்றும், தன்னை இழிவு படுத்தி பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார் என்றும் இயக்குனர் களஞ்சியம் சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பலமுறை விசாரணைக்கு வந்தும் நடிகை அஞ்சலி நேரில் ஆஜராகவில்லை.

கடந்த 12 ஆம் தேதி அஞ்சலிக்கு நேரில் ஆஜராகும்படி மீண்டும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அந்த நோட்டீசில் இன்று (29 ஆம் தேதி) ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று அஞ்சலி சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராவார் என்று பரபரப்பு தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இயக்குனர் களஞ்சியம் ஆஜராகி இருந்த நிலையில், நடிகை அஞ்சலிக்கு பதில் அவரது வழக்கறிஞர் மேகநாதன் ஆஜராகி, அஞ்சலிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் நேரில் ஆஜராகவில்லை என்றார்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணயை அடுத்த மாதம் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, நடிகை அஞ்சலிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

மாணவனை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை மகாராஷ்டிராவில் பரபரப்பு!. - வீடியோ


மகாராஷ்டிர மாநிலத்தில் ஆசிரியை ஒருவர் தனது வகுப்பு மாணவனை வகுப்பறையில் வைத்தே காலுக்கு எண்ணை போட்டு மசாஜ் செய்ய வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் வைத்திருந்த கண்காணிப்பு கேமரா மூலமாக இது அம்பலமாகியுள்ளது.

பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் தங்களது சொந்த வேலைகளை செய்ய சொல்வது, கடைகளுக்கு பொருட்கள் வாங்க அனுப்புவது, வீட்டு வேலைகளை செய்ய வைப்பது போன்ற செய்திகள் அவ்வப்போது வெளியாகின்றன.

தற்போது அதற்கெல்லாம் உச்சமாக ஒரு ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் வைத்தே மாணவன் ஒருவனை தனது காலுக்கு எண்ணை போட்டு மசாஜ் செய்ய வைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...!

Monday, October 28, 2013

சர்க்கரை நோயைப் போக்கும் துளசி இலைகள்

துளசி இலையில் உள்ள முக்கியமான சத்து ஒன்று சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதாக ஆந்திர மாநில குண்டூர் மாவட்டத்தில் உள்ள விக்னன் பல்கலை மாணவர்கள் குழு ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.

துளசி இலையில் உள்ள ‘ஆசிமம் சாங்டம்’ (Ocimum sanctum) என்ற சத்து சர்க்கரை நோயைக் குணப்படுத்தவல்லது என்பதை ஆய்வு பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

சர்க்கரை நோய் அதன் உச்சத்தில் இருதயம், கண்கள், கிட்னி, நரம்புகள், பாதம் ஆகியவற்றில் மோசமான விளைவுகளை ஏற்பத்தக்கூடியவை.

விக்னன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜி. முரளிகிருஷ்ணன் தலைமையிலான இந்த ஆய்வுக்குழுவினர் துளசி இலையின் சில அபூர்வ சக்திகளைக் கண்டு பிடித்துள்ளனர்.

துளசி இலை ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவல்லது என்று இந்த ஆய்வாளர்கள் ஆய்வு பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளனர்.

ஆய்வில் எலிகளைப் பயன்படுத்திய இந்த ஆய்வுக்குழு முதலில் ‘ஸ்ட்ரெப்டோசோசின்’ என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தி எலிகளுக்கு சர்ர்க்கரையின் அளவை அதிகரித்தனர். பிறகு துளசி இலையின் இவர்கள் கண்டுபிடித்த இந்த முக்கியமான மருந்தை நாளொன்றுக்கு ஒரு முறை 30 நாட்களுக்கு கொடுத்து வந்தனர்.

இந்த ஆய்வின் முடிவில் சர்க்கரையின் அளவு குறைந்திருந்ததோடு, முக்கிய உடலுறுப்புகளான கிட்னி, லிவர் ஆகியவை பாதுகாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

துளசி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியப் புராணங்களில் பத்ம புராணம் துளசியின் பலன்கள் பற்றி நிறைய பேசியுள்ளது.

ஆயுர்வேத சிகிச்சையில் துளசி பல்வேறு நோய்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. துளசியில் உள்ள யூஜினால் என்ற எண்ணெய் சத்து அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது. மூச்சுக் குழல் தொடர்பான நோய்களுக்கு துளசி இலையின் பலன்கள் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதில் உள்ள ‘அர்சாலிக்’ அமிலம் ஒவ்வாமை நோயைத் தீர்க்க பயன்படுகிறது.

அலர்ஜி, ஆஸ்த்மா, உடல் நோய் தடுப்புச் சக்திகளில் துளசி இலைகள் முக்கியப் பங்காற்றுவதும் ஏற்கனவே அறியப்பட்டவைதான்.