Tuesday, October 29, 2013

மாணவனை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை மகாராஷ்டிராவில் பரபரப்பு!. - வீடியோ


மகாராஷ்டிர மாநிலத்தில் ஆசிரியை ஒருவர் தனது வகுப்பு மாணவனை வகுப்பறையில் வைத்தே காலுக்கு எண்ணை போட்டு மசாஜ் செய்ய வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் வைத்திருந்த கண்காணிப்பு கேமரா மூலமாக இது அம்பலமாகியுள்ளது.

பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் தங்களது சொந்த வேலைகளை செய்ய சொல்வது, கடைகளுக்கு பொருட்கள் வாங்க அனுப்புவது, வீட்டு வேலைகளை செய்ய வைப்பது போன்ற செய்திகள் அவ்வப்போது வெளியாகின்றன.

தற்போது அதற்கெல்லாம் உச்சமாக ஒரு ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் வைத்தே மாணவன் ஒருவனை தனது காலுக்கு எண்ணை போட்டு மசாஜ் செய்ய வைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...!