அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் நடிப்பில் ரசிகர்களுக்கு தீபாவளி போனசாக வெளியாகயிருக்கும் படம் ஆரம்பம்.
பில்லா படத்தை இயக்கிய அஜித்தின் லக்கி இயக்குனரான விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள இப்படத்தில் மங்காத்தாவில் நடித்தது போலவே நரை முடி கெட்டப்பில் நடிக்கிறாராம் அஜித்.
அதேசமயம், ஜீன்ஸ்-டீசர்ட் என்று யூத்தை மெயின்டெய்ன் பண்ணியிருக்கிறாராம். கூடவே இப்படத்துக்காக அவர் எடுத்த ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் அனைத்தும் அவரின் பாடி லாங்குவேஜையே வித்தியாசப்படுத்தியிருக்கிறதாம்.
மேலும் உளவுத்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ள அஜித், ஒரு கட்டத்தில் பக்கா ஹாலிவுட் நடிகர்கள் போன்றே பர்பாமென்ஸ் செய்திருக்கிறாராம்.
இப்படம் டை ஹார்ட், ஸ்வார்டு பிஷ் போன்ற ஹாலிவுட் படங்களின் சாயலில் அவுட்புட் வந்திருப்பதாக சொல்லும் ஆரம்பம் படக்குழுவினர் இது அஜித்தை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும் என்கிறார்கள்.