விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஆரம்பம் படம், தீபாவளிக்கு வெளியாகிறது. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.
இதையடுத்து வீரம் படத்தில் அஜித் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் அஜீத் ஜோடி தமன்னா
வீரம் படத்திற்கு அஜித் – கெளதம் மேனன் இணையும் படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தினையும் ‘ஆரம்பம்’ படத்தின் தயாரிப்பாளர்களான ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது.
வீரம் படத்திற்கு அஜித் – கெளதம் மேனன் இணையும் படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தினையும் ‘ஆரம்பம்’ படத்தின் தயாரிப்பாளர்களான ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது. இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனே, மற்றும் பிரியங்கா சோப்ராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தீபிகா படுகோனே ஏற்கனவே கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு நாயகியாக நடித்துள்ளார். கோலிவுட்டில் ரஜினிக்கு அடுத்தபடியாக அஜீத்துக்குத்தான் அதிக ரசிகர்கள் இருப்பதால் இந்த வாய்ப்பை பெறுவதற்கு தீபிகாவும், பிரியங்காவும் போட்டி போடுகின்றனர். இன்னொரு ஹீரோயினியாக நஸ்ரியா நடிக்கிறார். நகரத்தில் நடைபெறும் த்ரில்லர் வகை கதையாம். வித்தியாசமான கெட்டப்பில் அஜித் தோன்றுவார் என்று அறிவித்திருக்கிறார்கள். மிகப்பிரமாண்டமாக தயாராக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2014 முதல் துவங்கவிருக்கிறது.