பல தடைகளை சந்தித்த பிறகே 'விஸ்வரூபம்' வெளியானது.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த 'விஸ்வரூபம்' ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.
தற்போது 'விஸ்வரூபம்2' இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறார் கமல்.
ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
தமிழ், இந்தி என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் 'விஸ்வரூபம்2' வெளியாக இருக்கிறது.
கமல் வருகிற நவம்பர் 7ம் தேதி, தனது பிறந்தநாளில் 'விஸ்வரூபம்2' டிரெய்லரை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்.